இயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம்: ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது

இயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம்: ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது

இயக்குனர் ராஜமவுலி மகன் திருமணம்: ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மகன் கார்த்திகேயா திருமணம் ஜெய்ப்பூரில் நாளை நடக்கிறது. இதையடுத்து தெலுங்கு திரையுலகினர் ஜெய்ப்பூரில் குவிந்துள்ளனர்.

இயக்குனர் ராஜமவுலியின் மூத்த மகன் கார்த்திகேயா. இவர் ராஜமவுலி இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர், பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில், தாண்டவம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா படங்களில் வில்லனாக நடித்தவருமான ஜெகபதி பாபுவின் அண்ணன் மகள் பூஜா பிரசாத்தை காதலித்து வந்தார்.

இவர்கள் காதலுக்கு இரண்டு பேர் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, திருமண நிச்சயதார்த்தம் ராஜமவுலி வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.

இதையடுத்து இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பேர்மன்ட் என்ற நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது. இதற்காக ஹீரோக்கள், பிரபா ஸ், ராணா, ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், நானி, நடிகைகள் அனுஷ்கா ஷெட்டி உட்பட தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலர் ஜெய்ப் பூர் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டனர். இன்று மாலை திருமணத்து முந்தைய நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை திருமண ம் நடக்க இருக்கிறது. மேலும் பல திரையுலக பிரபலங்கள் மணமக்களை நேரில் சென்று வாழ்த்துகிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com