’எனது அடுத்த படமும் பெரிய பட்ஜெட் படமாக இருக்கலாம்’ என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கூறினார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்த படம், ’பாகுபலி’. இந்தப் படம் ஹிட்டானது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகமும் மெகா ஹிட்டாகி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம், தனது அடுத்தப் படம் பற்றி கேட்டபோது, ‘எனது அடுத்தப் படம் சிறிய பட்ஜெட் படம் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. அது பெரிய பட்ஜெட் படமாக இருக்கலாம். ஆனால் அதிக விஷூவல் எபெக்ட்ஸ் இருக்காது. என் தந்தையிடம் கதையை உருவாக்கச் சொல்லியிருக்கிறேன். அவர் எழுதி முடித்ததும் ஹீரோ உள்ளிட்ட விஷயங்கள் முடிவாகும்’ என்றார்.