\
இலங்கையில் தமிழர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராஜமவுலி!

இலங்கையில் தமிழர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராஜமவுலி!

இலங்கையில் தமிழர்களுடன் கிரிக்கெட் ஆடிய ராஜமவுலி!
Published on

இலங்கையில் தமிழ் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடியிருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.

பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம், ’பாகுபலி 2’ . இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்தப் படத்தை அடுத்து அவர், யார் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதற்கிடையே, இலங்கைக்கு சென்றுள்ளார் இயக்குனர் ராஜமவுலி. காலே கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்ற அவர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தமிழ் கிரிக்கெட் டீமுடன் தானும் சேர்ந்து விளையாடினார். பின்னர், அவர்களுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். ‘லோக்கல் தமிழ் கிரிக்கெட் டீமுடன் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார் ராஜமவுலி.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com