அஜித்திற்கு தம்பியாக நடிக்கும் ராஜ் ஐயப்பா ? - ‘வலிமை’ அப்டேட்

அஜித்திற்கு தம்பியாக நடிக்கும் ராஜ் ஐயப்பா ? - ‘வலிமை’ அப்டேட்

அஜித்திற்கு தம்பியாக நடிக்கும் ராஜ் ஐயப்பா ? - ‘வலிமை’ அப்டேட்
Published on

‘அமராவதி’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பானு பிரகாஷின் மகன் ராஜ், ‘வலிமை’ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படப்பிடிப்பின்போது அஜித், சிறிய பைக் விபத்தில் சிக்கினார். ஆனால் இது குறித்து வெளியே தகவல் கசியவே இல்லை. இந்த விபத்தில் அஜித்திற்கு அதிக காயம் ஏற்படவில்லை. இதனால் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அஜித்திற்கு அறிவுரை கூறியிருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அவர் படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இதனிடையே அஜித்திற்கு காயம் ஏற்பட்டதற்குப் பிறகு அவர் முதன்முறையாக அவரது மேனஜரின் குடும்பத்தார் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அஜித் திருமண மண்டபத்தின் வாசலிலேயே நின்று அனைவரையும் வரவேற்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும் இந்த விழாவில் அவருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதிகம் பகிரப்பட்டன.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜித், துப்பாக்கிச் சுடும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரலாக மாறியது. அவர் தன் இரு காதில் ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு குறிவைத்து சுடுவது அந்தப் படங்களில் பதிவாகி இருந்தது. காதில் உள்ள ஹெட்ஃபோனில் நம் நாட்டின் தேசியக் கொடி வரையப்பட்டிருந்தது. அஜித், சாதாரணமான பச்சை நிற டி-ஷர்ட்டில் இருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் இடம்பெறும் ரேஸ் காட்சிகளை படமாக்கி வருகிறார். மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் தொடங்கவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது. அந்தப் பயணத்திற்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இதனிடையே ‘வலிமை’ குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அதர்வா நடிப்பில் வெளிவந்த ‘100’ படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா அஜித்தின் படத்தில் இணைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தின் இவர் அஜித்தின் தம்பியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘வலிமை’ படப்பிடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத்துடன் ராஜ் ஐயப்பா இருப்பதை போல சில படங்கள் வெளியானதால் இந்தத் தகவல் உறுதியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் முதல் படமான 'அமராவதி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் பானு பிரகாஷ். இவரது மகன்தான் ராஜ். முன்பு, அதர்வாவின் '100' பட வெளியீட்டின்போது, அஜித்துடனான நட்பை பற்றி பானு பிரகாஷ் வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து மகனின் படத்தை பானு பிரகாஷ் அஜித்திற்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்த அஜித், பானு பிரகாஷின் மகன் ராஜ் ஐயப்பாவின் தோற்றம் நன்றாக இருப்பதாகவும் அவரை நடிக்க வைக்கும்படியும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com