தங்கை நடிகை திருமணம்: அக்கா வெளியிட்ட புகைப்படம்!

தங்கை நடிகை திருமணம்: அக்கா வெளியிட்ட புகைப்படம்!

தங்கை நடிகை திருமணம்: அக்கா வெளியிட்ட புகைப்படம்!
Published on

தமிழில் பாரதிராஜா இயக்கிய ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகளான இவர், பின்னர் இந்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்தார். இவர் சிவம் திவாரி என்பவரை சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் புனேவின் ரகசியமாக நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த திருமணம் பற்றி ரியாவோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் ரியா சென்னின் அக்காவும் நடிகையுமான ரைமா சென் இவர்கள் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அம்மா, மூன் மூன் சென்னும் ரைமா சென்னும் மணமக்களுடன் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com