\
நான் ஏன் கிளாமரா நடிக்கிறேன்னா..! விளக்கமளிக்கிறார் ராய் லட்சுமி

நான் ஏன் கிளாமரா நடிக்கிறேன்னா..! விளக்கமளிக்கிறார் ராய் லட்சுமி

நான் ஏன் கிளாமரா நடிக்கிறேன்னா..! விளக்கமளிக்கிறார் ராய் லட்சுமி
Published on

கிளாமராக நடிப்பது ஏன் என்பதற்கு நடிகை ராய் லட்சுமி விளக்கமளித்தார்.

ஐதராபாத்தில் நடக்கும் ஐஃபா விழாவில் நடனமாட இருக்கும் ராய் லட்சுமி, புதிய தலைமுறைக்காக பேசினார். ‘நான் இந்தியில் நடித்துள்ள ஜுலி 2 படத்துக்காக ஒன்றரை வருடம் செலவழித்துள்ளேன். ஒரு படத்துக்கு இவ்வளவு நாள் செலவழித்தது, இதுதான் முதல்முறை. உடலை ஏற்றி, குறைத்து நடித்துள்ளேன். எமோஷனல் கதையை கொண்ட படம் இது. இதில் நான் அதிக கிளாமராக நடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். உன்மைதான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் இரண்டு மணிநேரம் ஹீரோயின் அழுது கொண்டே இருந்தால் ஆண்கள் படம் பார்ப்பார்களா? அதனால் கிளாமர் தேவையாக இருக்கிறது’ என்ற ராய் லட்சுமி, முதல்முறையாக இந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். ‘உண்மைதான். இதில் படம் முழுவதும் வருகிறேன். இந்தப் படத்துக்காக வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். தமிழில் , யார் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். இதில் ஹீரோ ஹீரோயின் எல்லாமே நான் என்றார் ராய்லட்சுமி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com