தமன்னா இடத்தை பிடித்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.
சீமாந்திராவில் தயாராகி வரும் மத்திய அரசின் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ விளம்பரத்தில் நடிகை தமன்னா நடித்து வருகிறார். இந்த விளம்பரம் பெண் குழந்தைகளின் வளர்ப்பையும் படிப்பையும் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விளம்பரத்தை போலவே தெலங்கானா மாநிலத்திற்காக ஒரு தனி விளம்பரம் எடுக்கப்பட உள்ளது. அதற்கு பிராண்ட் அம்பாசிட்டராக ரகுல் ப்ரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தமன்னா சீமாந்திரா படத்தில் நடிப்பதைப் போல தெலங்கானாவில் தயாராகும் விளம்பரப்படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘எப்போது நாம் கற்றுக்கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறமோ அப்போது நாம் ஒருபடி மேம்பட்டு வளரத் தொடங்குவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.