\
கார்த்தி உடன் ரகுல் ப்ரீத் சிங் சேட்டை

கார்த்தி உடன் ரகுல் ப்ரீத் சிங் சேட்டை

கார்த்தி உடன் ரகுல் ப்ரீத் சிங் சேட்டை
Published on

‘காற்று வெளியிடை’ படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் படம் ‘தீரன் அத்தியாயம் ஒன்று.’ அப்படத்தை வினோத் இயக்கி வருகிறார். 
இதை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான புதிய படங்களை வலை தளத்தில் வெளியிட்டுள்ளது படக் குழு. அதில் காக்கிச் சட்டையில் கட்டுமஸ்தான போலீஸ் உடையில் கார்த்தி மிரட்டுகிறார். அவருடன் ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடிக்கிறார். 

இப்படத்தில் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். 
தெலுங்கில் மகேஷ்பாபு தமிழில் கார்த்தி என ஒரே சமயத்தில் இரண்டு ஹீரோக்களுடன் ஹை ஸ்பீடில் வேகம் எடுத்திருக்கிறார் ரகுல் ப்ரீத். தனது படத்தின் 

புகைப்படங்கள் வெளியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்திட்டு உள்ள ரகுல் ப்ரீத் “இந்தப் படத்தின் படப்பிடிப்பு 

முழுக்க விளையாட்டாக இருந்தது. கார்த்தியுடன் செலவழித்த நேரங்கள் மறக்க முடியாதவை”என்று உணர்ச்சிப் பொங்க கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com