\
ராகவா லாரன்ஸ் படத்தில் பிரியா பவானிசங்கர்- அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் படத்தில் பிரியா பவானிசங்கர்- அதிகாரபூர்வ அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் படத்தில் பிரியா பவானிசங்கர்- அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ‘ருத்ரன்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு காஞ்சனா 3 படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரை வைத்து காஞ்சனா படத்தை ‘லஷ்மி’யாக இந்தியில் ரீமேக் செய்து இயக்கினார்.  சமீபத்தில்தான் இப்படம் வெளியானது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ருத்ரன்’ என்று வெளியானது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தினை பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என்பதோடு இப்படத்தின் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்நிலையில், ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியா பவானிசங்கர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2, குருதி ஆட்டம், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com