’இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் நூர் இனயத் கானாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே!

’இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் நூர் இனயத் கானாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே!

’இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் நூர் இனயத் கானாக நடிக்கிறார் ராதிகா ஆப்தே!
Published on

ஹாலிவுட்டில் உருவாகும் ’வேர்ல்ட் வார்-2’ படத்தில் ராதிகா ஆப்தே, நூர் இனயத் கானாக நடிக்கிறார்.

தமிழில், வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை, ராதிகா ஆப்தே. இந்தி படங்களில் அதிக நெருக்கமாக நடித்து அதிரடி காட்டும் ராதிகா, தமிழ்ப் படத்தில் தனது காலை சுரண்டிய ஹீரோவை அடித்தேன் என்று சமீபத்தில் பரபரப்பைக் கிளப்பியவர்.

இவர் இப்போது ’இரண்டாம் உலகப் போர்-2’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இரண்டாம் உலகப் போர் பற்றி பல்வேறு படங்கள் வந்துள்ள நிலையில் அந்தப் படங்களில் இருந்து வித்தியாசமாக இது எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் சாரா மேகன் தாமஸ், ஸ்டானா கேடிக் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் ராதிகா, இரண்டாம் உலகப் போரின் போது ரகசிய உளவாளியாகச் செயல்பட்ட நூர் இனயத் கான் கேரக்டரில் நடிக்கிறார். 

யார் இந்த நூர் இனயத் கான்?

நூரின் அப்பா, இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தானின் பரம்பரையைச் சேர்ந்தவர். அம்மா, பிரானி அமீனா பேகம் அமெரிக்கா வைச் சேர்ந்தவர். லண்டனில் வசித்து வந்த இவர், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தின் போது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாகப் பணியாற்றியவர்.

பிரான்சை, ஜெர்மனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அனுப்பப்பட்ட இவர், முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு பணியாற்றினார். ஹிட்லரின் ரகசியப் படையினரால் கைது செய்யப்பட்ட நூர், 1944-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். 30 வயதில் உயிரிழந்த இவரது கேரக்டரில்தான் ராதிகா ஆப்தே நடிக்கிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com