\
சில்மிஷம் செய்தார் தமிழ் ஹீரோ: ஒங்கி அறைந்தார் ராதிகா ஆப்தே!

சில்மிஷம் செய்தார் தமிழ் ஹீரோ: ஒங்கி அறைந்தார் ராதிகா ஆப்தே!

சில்மிஷம் செய்தார் தமிழ் ஹீரோ: ஒங்கி அறைந்தார் ராதிகா ஆப்தே!
Published on

தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழ்ப் பட ஹீரோவை ஓங்கி அறைந்ததாக நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தமிழில், வெற்றிச்செல்வன், தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உலா ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை, ராதிகா ஆப்தே. சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள், ஹீரோ ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசும் ராதிகா ஆப்தே,  சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்தி நடிகை நேகா துபியா நடத்திய இந்த நிகழ்ச்சியில் பரபரப்பு தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் ராதிகா ஆப்தே.

அவர் கூறும்போது, ‘தமிழில் ஒரு படத்தில் நான் நடித்தேன். அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஹீரோ என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் தமிழில் பெரிய நடிகர். இதற்கு முன் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. என் பாதங்களை அவர் வருடியதும் கோபத்தில் ஓங்கி அறைந்துவிட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ராதிகா சொன்ன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள ராதிகா ஆப்தே, எந்த ஹீரோவை அறைந்தார் என்று தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com