\
இயக்குனர் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே!

இயக்குனர் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே!

இயக்குனர் ஆனார் நடிகை ராதிகா ஆப்தே!
Published on

நடிகை ராதிகா ஆப்தே, ’ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தமிழில், ’தோனி’, ’வெற்றிச்செல்வன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’கபாலி’  ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது ’ஸ்லீப் வாக்கர்ஸ்’ என்ற அரை மணி நேர படத்தை இயக்கியுள்ளார். இதில் குல்ஷன் தேவைய்யா, சஹானா கோஸ்வாமி உட்பட சிலர் நடித்துள்ளனர். இதை ஹனி ட்ரேஹன், அபிஷேக் சவுபே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘இது வழக்கமான கதையை கொண்ட படம் அல்ல. பெருமையான சப்ஜெக்டை கொண்டது. சமூகத்தைக் கேள்வி கேட்கும் படமாகவும் இருக்கும். ராதிகா ஆப்தே தனது திறமையை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்’ என்றார் தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன்.

இயக்குனரானது பற்றி ராதிகா ஆப்தே கூறும்போது, ‘’எல்லாம் உடனடியாக முடிந்துவிட்டது. ஹனி, அபிஷேக், லலித் ஆகியோர் சரியான நேரத்தில் இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்தார்கள். ஒரு படத்தை முழுமையாக வெளிக் கொணர்வதில் அதிகம் கற்றுக்கொண்டேன்’’என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com