காதலில் உருகும் பிரபாஸ்: திரைக்கு வரும் தேதியுடன் வெளியானது ‘ராதே ஷியாம்’ முன்னோட்டம்!

காதலில் உருகும் பிரபாஸ்: திரைக்கு வரும் தேதியுடன் வெளியானது ‘ராதே ஷியாம்’ முன்னோட்டம்!
காதலில் உருகும் பிரபாஸ்: திரைக்கு வரும் தேதியுடன் வெளியானது  ‘ராதே ஷியாம்’  முன்னோட்டம்!

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷியாம்’ படத்திலிருந்து ஒரு முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபாஸ், நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும்  ‘ராதே ஷியாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து ப்ரீ - டீஸரும் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு இந்தி, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்தப்படத்திற்கு ஹிந்தியில் மிதூன் மற்றும் மனன் பரத்வாஜ் ஆகியோரும் பிற மொழிகளுக்கு தமிழில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ ’ஒரு  நாள் கூத்து’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். 

70 களின் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இந்தப்படத்தை இயக்குநர் ராதா கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முன்னதாக, சமூக வலைதளங்களில் ‘ராதே ஷியாம்’ படம் குறித்த அப்டேட்டை கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, படக்குழு சார்பில் இருந்து காதலர் தினமான இன்று படத்தின் முன்னோட்டக் காட்சி ஒன்று வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன் படி தற்போது படத்திலிருந்து முன்னோட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ’ராதே ஷியாம்’ வருகிற ஜூலை மாதம் 30 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் இணைக்கப்பட்டுள்ளது.  

டீசரில், மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் துள்ளி குதித்து தனது காதலியான பூஜா ஹெக்டெவை தேடுகிறார் பிரபாஸ். அதன் பின்னர் பிரபாஸ்,பூஜாஹெக்டேவின் சந்திப்பு நிகழ்கிறது. அதில் பூஜா பிரபாஸிடம்  “ உனக்கு என்ன ரோமியோனு நினைப்பா என்று கேட்க, பிரபாஸ் ”ச்ச அவர் காதலுக்காக செத்துட்டார்.. எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை” என்கிறார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com