\
பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு

பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு - படக்குழு அறிவிப்பு
Published on

கொரேனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து தியேட்டர் மூடப்படும் அபாயம் உள்ளதால் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யுவி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது ‘கடந்த சில நாட்களாக பெருகி வரும் ஒமைக்ரான் பரவல் காரணமாக ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கிறோம்.

ராதே ஷ்யாம் திரைப்படம், காதல் மற்றும் விதியை அடிப்படையாகக் கொண்ட கதைக்களம். கடினமான தருணத்திலும் தங்கள் அன்பு எங்களை மேன்மைப்படுத்தும். விரைவில் தியேட்டரில் சந்திப்போம்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

எல்லையில்லா அன்பு மற்றும் ஆதரவு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கொரோனா பரவலை முன்னிட்டு ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில், தற்போது ராதே ஷ்யாம் படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com