எம்.ஆர்.ராதா அப்ப கேட்டார். இன்னும் உருப்படாமலே இருக்கோம்: ராதாராவி பேச்சு

எம்.ஆர்.ராதா அப்ப கேட்டார். இன்னும் உருப்படாமலே இருக்கோம்: ராதாராவி பேச்சு
எம்.ஆர்.ராதா அப்ப கேட்டார். இன்னும் உருப்படாமலே இருக்கோம்: ராதாராவி பேச்சு

இந்த நாடு எப்படா உருப்படும் என்று நல்லவன் வாழ்வான் படத்தில் என் அப்பா (எம்.ஆர்.ராதா) கேட்டார். இன்னும் உருப்படாமலேயே இருக்கிறோம் என்று நடிகர் ராதாரவி கூறினார்.

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவேல் வாசு உட்பட பலர் நடிக்கும் படம், ‘சிவலிங்கா’. பி.வாசு இயக்கியுள்ளார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் மூலம் ஆர். ரவீந்திரன் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ராதாரவி பேசும்போது, ‘லாரன்ஸ் மாஸ்டர் கூட அழகா வர்றார். பார்க்க, சாமியார் மாதிரி இருக்கார். ஆனா;, புரட்சி உள்ளம் படைத்தவர். இல்லைன்னா, ஜல்லிக்கட்டு போராட்டத்துல போய் உட்கார்வாரா? அவர் விளம்பரம் தேடறார்னு சொன்னாங்க. அவருக்கு ஏன் விளம்பரம்? அவர் நடிச்ச’மொட்ட சிவா கெட்ட சிவா’ பார்த்தேன். அதுல இவரு, ’கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு சரியா வரும். எங்கண்ணன் (ரஜினி) பட டயலாக்கு’ன்னு சொல்வார். நான் சொன்னேன், ஒங்க அண்ணன் டயலாக்கா?. அண்ணாமலை படத்துல நான் தான் அந்த டயலாக்கை படம் பூரா பேசியிருப்பேன்னு சொன்னேன்.

’நல்லவன் வாழ்வான்’ படத்துல எங்க அப்பாவும் (எம்.ஆ.ராதா) புரட்சித் தலைவரும் (எம்.ஜி.ஆர்) தேர்தலில் எதிரெதிரா போட்டியிடுவாங்க. ரெண்டு பேரையும் மக்கள் தூக்கிவச்சுக் கொண்டாடுவாங்க. எங்கப்பா கேட்பார், ’யாரு ஜெயிச்சா, யாரு தோற்றா?’ன்னு. நாம தோற்றுட்டோம், அவர் ஜெயிச்சுட்டார்னு சொல்வாங்க. அப்ப, எங்கப்பா சொல்வார், ’அடப்பாவிங்களா, ஜெயிச்சாலும் தூக்குறீங்க, தோற்றாலும் தூக்குறீங்க, எப்படா இந்த நாடு உருப்படும்?’னு கேட்டார். அப்பா அன்னைக்கு கேட்டார். இன்னும் உருப்படாமயேதான் இருக்கோம்.

இயக்குனர் பி.வாசு, இதில் சந்திரமுகி இயக்குனரின் படைப்பு என்று விளம்பரப்படுத்துகிறார். அவரிடம் ஒரு கோரிக்கை, நீங்க சின்னத்தம்பி இயக்குனர் என்றே போடுங்கள். அதுதான் உங்களுக்கு பெரிய ஹிட். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘என்னை அண்ணன் மவனே’ என்றுதான் கூப்பிடுவார். அதில் என் நடிப்பை பற்றி, அவர் பெருமையா சொல்லிட்டே இருப்பாராம். அவர்கிட்ட போக எனக்குப் பயம். ஏன்னா பக்தி இருக்குமில்லையா? அவர் சொன்னார், ‘டேய் நல்லா பண்ணியிருக்கடா, சின்னதம்பியில. அவ்வளவு நல்லவனா பண்ணிட்டு, கடைசி சீன்ல நீ செஞ்ச பாருடா, அதுதான்டா வில்லத்தனம்’ன்னு சொன்னார். அந்த மாதிரி ஒரு பெரிய புகழை எனக்குக் கொடுத்தது பி.வாசு’ என்றார் ராதாரவி.

இசை அமைப்பாளர் தமன், ஒளிப்பதிவாளர் சர்வேஷ் முராரி, நடிகை பானுப்பிரியா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com