\
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ராஷி கண்ணா கதாபாத்திரம் -போட்டோவுடன் படக்குழு அப்டேட்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ராஷி கண்ணா கதாபாத்திரம் -போட்டோவுடன் படக்குழு அப்டேட்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் ராஷி கண்ணா கதாபாத்திரம் -போட்டோவுடன் படக்குழு அப்டேட்
Published on

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில், நடிகை ராஷி கண்ணாவின் கதாபாத்திரத்தின் பெயருடன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹருடன், தனுஷ் இணைந்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷுடன், அனிருத் கூட்டணி அமைத்து இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இந்தப் படம், நடிகர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28-ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதலாவதாக ராஷி கண்ணாவின் கதாபாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனுஷா என்ற பெயரில், பள்ளியில் உடன் படித்த சக மாணவியாக ராஷி கண்ணா இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் மற்றவர்களின் கதாபாத்திரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘திருச்சிற்றம்பலம்’ படம் மட்டுமின்றி நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படமும் இறுதிக் கட்ட பணிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com