\
‘அழகென நான் காண்பது..’ -புகைப்படங்களை பகிர்ந்து ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்

‘அழகென நான் காண்பது..’ -புகைப்படங்களை பகிர்ந்து ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்

‘அழகென நான் காண்பது..’ -புகைப்படங்களை பகிர்ந்து ஐஸ்வர்யா ராயை புகழ்ந்து தள்ளிய பார்த்திபன்
Published on

பொன்னியின் செல்வன் திரைப்பட படப்பிடிப்பில் உடன் நடித்த ஐஸ்வர்யா ராயுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.

விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ரஹ்மான், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷமி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. 60 ஆண்டுகளுக்கும் மேலாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக எடுக்க பலர் முயன்று, பலகட்ட சவால்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை வெற்றிக்கரமாக எடுத்து முடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்திற்காக பெரும் ஆவலுடன் காத்துள்ளனர். அமெரிக்காவில் இந்தப் படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதம் நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். இவர்களுடன் நடிகர் சரத்குமாரும் உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com