சிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்!

சிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்!

சிகிச்சை காரணமாக பட வாய்ப்பை உதறினார் மாதவன்!
Published on

அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் மாதவன் இன்னும் குணமாகாததால் இந்தி பட வாய்ப்பை உதறியுள்ளார்.

தமிழ், இந்தியில் பிசியாக நடித்து வருகிறார் மாதவன். தமிழில் அவர் கடைசியாக 'விக்ரம் வேதா' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இந்த காயம் குணமாக இன்னும் சில மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான ’டெம்பர்’ இந்தி ரீமேக்கில் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் ஹீரோ. ரோகித் ஷெட்டி இயக்குகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

தோள்பட்டை அறுவைச் சிகிச்சை செய்துள்ளதால் அதில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகிறேன். அதனால் ரோகித் ஷெட்டி படத்தில் நடிக்க இயலவில்லை. நான் அவர் படங்களின் ரசிகன். இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

ரோகித் ஷெட்டி கூறும்போது, ’இது ரீமேக் படம்தான். ஆனாலும் முழுமையான ரீமேக்காக இருக்காது. இந்திக்கு தகுந்த மாதிரி மாற்றியிருக்கிறோம்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com