தமன்னாவுடன் கருத்துவேறுபாடு: தெலுங்கு ’குயின்’ நிறுத்தமா?

தமன்னாவுடன் கருத்துவேறுபாடு: தெலுங்கு ’குயின்’ நிறுத்தமா?
தமன்னாவுடன் கருத்துவேறுபாடு: தெலுங்கு ’குயின்’ நிறுத்தமா?

தமன்னாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ’குயின்’ படத்தின் தெலுங்கு ரீமேக் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதை தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

கங்கனா ரனவ்த் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ரீமேக் ஆவதாகக் கூறப்பட்டது. முதலில் படத்தை ரேவதி இயக்குவதாக இருந்தார். இதுபற்றி அறிவிப்பும் வெளியானது. ஆனால் அவருக்குப் பதில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்தும் தெலுங்கு, மலையாளத்தை நீலகண்டாவும் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தமிழில், காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாரூல் யாதவ் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்பட்டது.

(குயின் -கங்கனா)

இந்நிலையில் ஒரிஜினல் கதையில் இருந்து சில மாற்றங்களை செய்திருந்தார் தெலுங்கு இயக்குனர் நீலகண்டா. இதை தமன்னா ஏற்கவில்லை. கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து நீலகண்டா விலகினார். அவர் மலையாளத்தை மட்டும் இயக்குகிறார். இதையடுத்து தமிழ், கன்னடத்துடன் தெலுங்கையும் இயக்கும் பொறுப்பு ரமேஷ் அரவிந்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், தெலுங்கு பதிப்பு நின்றுவிட்டதாகவும் அந்தப் படத்தில் இருந்து தமன்னா விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி படத் தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது, ‘தமிழ், கன்னடப் படங்களை முடித்துவிட்டு ரமேஷ் அரவிந்த் தெலுங்குப் பதிப்பை தொடங்குவார். தமன்னா படத்தில் இருந்து விலகவும் இல்லை. படம் நின்று போகவும் இல்லை. ஆனால், தள்ளிப் போகிறது’ என்று தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com