புஷ்பா 2
புஷ்பா 2x

பாகுபலி 2 எல்லாம் சும்மா.. ரூ.1831 கோடி வசூல்! முதல் இந்திய படமாக புதிய வரலாறு படைத்த புஷ்பா 2!

இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருந்த பாகுபலி 2-ஐ ஓரங்கட்டி புதிய வரலாறு படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம்.
Published on

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் செம்மரக் கடத்தலை மையமாக கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருந்த திரைப்படத்தில் புஷ்ப ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.

படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்த நிலையில், மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற புஷ்பா 1 திரைப்படம் வசூலில் ரூ.390 கோடிவரை ஈட்டி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியானது.

புஷ்பா 2
புஷ்பா 2

புஷ்பா 1 திரைப்படத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் அதிகப்படியான வரவேற்பை சினிமா ரசிகர்கள் வழங்கிய நிலையில், படம் வெளியான 15 நாட்களில் உலகளவில் 1500 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. நிறைய விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டப் போதும், பல சிக்கலில் அல்லு அர்ஜுன் மாட்டியபோதும் வசூலில் மந்தமே இல்லாமல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் புஷ்பா 2 படம் 32வது நாள் முடிவில் வரலாற்று வசூலை குவித்துள்ளது.

புஷ்பா 2
நேரடியாக மோதவிருக்கும் அஜித் - தனுஷ் படங்கள்.. ’குட் பேட் அக்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்தியாவில் அதிக வசூல் செய்த முதல் படம்..

56 நாட்களை கடக்காமல் புஷ்பா 2 ஒடிடி தளத்தில் வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், 32 நாட்களை எட்டியபோதிலும் வசூலில் நாளுக்கு நாள் சாதனைகளை படைத்துவருகிறது புஷ்பா 2 திரைப்படம்.

அந்தவகையில் 32வது நாள் முடிவில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்திருக்கும் தயாரிப்பு நிறுவனம், புஷ்பா 2 உலகளவில் 1831 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மட்டும் அதிக வசூல் செய்த படங்களில் முதலிடத்திலிருந்து பாகுபலி 2 சாதனையை உடைத்து, புஷ்பா 2 முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தயாரிப்பு நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

sacnilk வெப்சைட்டின் படி பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் 1416.9 கோடியை வசூல் செய்து முதலிடத்திலிருந்த நிலையில், புஷ்பா 2 படம் ரூ.1438 கோடியை வசூல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. 

புஷ்பா 2
இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று.. கர்நாடகாவில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com