பொங்கலுக்கு உறுதியாக வரும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்

பொங்கலுக்கு உறுதியாக வரும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்

பொங்கலுக்கு உறுதியாக வரும் விஜய் சேதுபதியின் புரியாத புதிர்

விஜய்சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த புரியாத புதிர் திரைப்படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் புரியாத புதிர் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது இப்படம் ஜனவரி 13ஆம் தேதி வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மெல்லிசை என்று முன்பு அறிவிக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ‘புரியாத புதிர்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திரில்லர் பாணியில் படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு ‘புரியாத புதிர்’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் எனக் கருதியே படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய்சேதுபதி இதுவரை பார்த்திராத அளவுக்கு ஸ்டைலாகவும் அழகாகவும் இப்படத்தில் தோன்றுவார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் வெளிவரவுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதியின் புரியாத புதிர் படமும் வெளிவரும் என்ற

செய்தி இரண்டு நடிகர்களின் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com