\
பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்! - சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் அஜித் ரசிகர்கள்

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்! - சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் அஜித் ரசிகர்கள்

பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்! - சாலையோர மக்களுக்கு உணவு வழங்கும் அஜித் ரசிகர்கள்
Published on

கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள்.  

 கொரோனாவின் இரண்டாவது அலையால், அதிகம் பாதித்த மஹாராஷ்டிரா, உ.பி, டெல்லி, மத்திய பிரதேசம், தமிழகம் என பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா தலம் என்பதால் புதுச்சேரியில் சாலைகளில் வசிப்பவர்கள் ஏராளம்.  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் சாலையோர மக்கள் உணவின்றி தவிக்கக்கூடாது என்பதற்காக அஜித் ரசிகர்கள் “பசித்தால் எடுத்துக்கொள்” என்ற வாசகத்துடன் கூடிய நடைபாதை வண்டியில் உணவு, வாழைப்பழம், குடிநீர் ஆகியவற்றை வைத்து உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உன்னத சேவையை செய்து வருகிறார்கள். ஏற்கனவே, கன்னியாகுமரியிலும் அஜித் ரசிகர்கள் ஊரடங்கில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com