பிரபல நடிகரை வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ

பிரபல நடிகரை வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ
பிரபல நடிகரை வீட்டுக்குள் புகுந்து தாக்கிய சைக்கோ

தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் மேகா ஸ்ரீகாந்தை சைக்கோ ஒருவர் தாக்கிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகர் மேகா ஸ்ரீகாந்த். 'ஸ்வராபிஷேகம்', 'விரோதி' உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். டோலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் இருந்தாலும் அவற்றிலிருந்து வெகு தூரம் தள்ளி நிற்பவர் இவர். இந்நிலையில் சைக்கோ ஒருவர் திடீரென இவரின் வீட்டுக்குள் புகுந்து விலையுயர்ந்த சொகுசு கார் மற்றும் சில பொருட்களையும் அடித்து நொறுக்கியதோடு மேகா ஸ்ரீகாந்தையும் தாக்க முயற்சித்துள்ளார்.

பின்பு உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் அந்த நடிகரின் வீட்டில் சமையல்காரராக 3 மாதங்கள் வேலை செய்தவராம். அவரின் சைக்கோ குணத்தால் ஸ்ரீகாந்த் அவரை வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். அந்த ஆத்திரத்தால் மீண்டும் வீடி தேடி வந்து நடிகரை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் டோலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com