சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி

சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி
சிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி

பிஎஸ் மித்ரன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தப் படம் வழக்கமான காமெடி கலந்த திரைக்கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவியது. விஜய்யின் ‘தெறி’ படத்தில் வெளியான பாடல் வரி என்பதால் அதனை விரும்பி சிவகார்த்திகேயன் தேர்வு செய்துள்ளார் என்றனர். ஆனால் இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ், “படத்தின் தலைப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்” எனக் கூறியிருந்தார்.

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக சென்று கொண்டுள்ளன. இதனை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக சிவா வெளி கம்பெனிக்கு படம் நடிக்க முன் வந்துள்ளார். அதே போல அவரது விரும்பமான இசையமைப்பாளர் அனிருத்தை விட்டு முதன்முறையாக ஹிப்ஹாப் ஆதி இசையில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் சென்று கொண்டிருக்கும்போதே சிவா, தனது அடுத்த படத்திற்கான இயக்குநரை தேர்வு செய்துவிட்டதாக தெரிகிறது. 

இந்த வருடம் விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படத்தின் இயக்குநர் பிஎஸ் மித்ரன் தான் அடுத்து சிவா படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொழில்நுட்பங்களால் ஏற்படும் சமூகப் பிரச்னைகளை முன்வைத்து இயக்கப்பட்ட ‘இரும்புத்திரை’விஷாலுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஆகவே அதனையடுத்து சிவா, இவரை தேர்வு செய்துள்ளார் என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம். த்ரிலர் கலந்த  சமூகத்திற்கான செய்தியை கூறும் கதையாக இப்படத்தை மித்ரன் இயக்க திட்டமிட்டுள்ளார். இவர் இயக்கப் போகும் படத்தை 24ஏஎம் ஸ்டுடியோ  தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com