\
விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு

விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு

விஜய் படத்தின் படப்பிடிப்பிற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு
Published on

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின், படப்பிடிப்பிற்கு பேராசியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார் விஜய். இன்னும் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. அதனால் தற்போது ‘விஜய் 62’ என்று இப்படம் அழைக்கப்பட்டு வருகிறது. ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘விஜய் 62‘ படத்தின் படப்பிடிப்பிற்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  திரைப்படத்திற்கான ஷூட்டிங் பச்சையப்பன் கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் படப்பிடிப்பிற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com