"மருந்து, மாத்திரைகூட வாங்க பணமில்லை"-உதவியின்றி வாடும் ரஜினி, விஜயகாந்த் பட தயாரிப்பாளர்!

"மருந்து, மாத்திரைகூட வாங்க பணமில்லை"-உதவியின்றி வாடும் ரஜினி, விஜயகாந்த் பட தயாரிப்பாளர்!

"மருந்து, மாத்திரைகூட வாங்க பணமில்லை"-உதவியின்றி வாடும் ரஜினி, விஜயகாந்த் பட தயாரிப்பாளர்!

பிதாமகன், பாபா, கஜேந்திரா, சேது, லூட்டி, என்னமா கண்ணு போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உதவிக்காக காத்திருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் வி.ஏ.துரை. இவர் பல வெற்றி படங்களை தயாரித்தவர். நடிகர் ரஜனிகாந்த் நடித்த பாபா, விஜயகாந்த் நடித்த கஜேந்திரா மற்றும் விக்ரம் நடித்த பிதாமகன், சேது, நடிகர் சத்யராஜின் விவரமான ஆளு போன்ற படங்களை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகில் தனது பங்களிப்பை செய்தவர் இவர். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு விருகம்பாக்கம் பகுதியில் தனியாக வசிக்கிறார். இவருக்கு கடந்த மூன்று நான்கு மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துவந்த நிலையில், தற்போது அவர் உதவிகோரியுள்ளார்.

நடிகர் ரஜினி தனக்கு 40 ஆண்டு கால நண்பரென கூறும் அவர், தனக்கு அவர் உதவவேண்டுமென கோரிக்கை வைக்கிறார். தன்னால் நடக்கவே முடியவில்லையென கூறி அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் அவர். மருந்து மாத்திரைகூட வாங்க பணமில்லை எனக்கூறி பொருளாதார உதவிகளை கோரியுள்ளார்.

தற்போதைக்கு நடிகர் சூர்யா 2 லட்சம் ரூபாயும் மற்றும் கருணாஸ் 50 ஆயிரம் ரூபாயும் அவருக்கு நிதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com