‘புரமோஷனுக்கு வராவிட்டால் சம்பளத்தில் ஒருபகுதி கட்’ - த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

‘புரமோஷனுக்கு வராவிட்டால் சம்பளத்தில் ஒருபகுதி கட்’ - த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

‘புரமோஷனுக்கு வராவிட்டால் சம்பளத்தில் ஒருபகுதி கட்’ - த்ரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை
Published on

இனிவரும் படங்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்துக் கொள்ளவில்லை என்றால் சம்பளத்தில் ஒருபங்கை திருப்பி தர வைப்பதற்கான முயற்சியில் இறங்குவோம் என்று தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இது த்ரிஷாவுக்கு 60வது படம். இதில் அவர் ஒரு மருத்துவராக நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் நந்தா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ளார். இதற்கான ஊடகச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை த்ரிஷா கலந்து கொள்ளவில்லை. ஆகவே நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரும் அதைக் குறிப்பிட்டு பேசினர்.



இது குறித்து ‘அம்மா க்ரியேஷன்’ தயாரிப்பாளர் சிவா பேசியபோது மிக காட்டமாக சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர், “பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணும் போது அந்த ஹீரோவை வைத்து நாம் புரமோஷன் செய்துக் கொள்ளலாம். அந்தப் படத்தின் விழாக்களுக்கு ஹீரோயின்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கும் படத்திற்கு நிச்சயமாக அந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட நாயகி வரவேண்டும். பெரிய நடிகையாக வளர்ந்த பிறகு அது அவர்களுக்கு வேண்டுமானால் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் கட்டாயம் தேவையாக இருக்கிறது.

நம்மை நம்பி இவ்வளவு பெரிய படத்தை எடுத்திருக்கிறார்கள், இவ்வளவு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள், ஆகவே அவர்கள் உடன் நாம் நிற்கவேண்டும் என்ற எண்ணம் யாராக இருந்தாலும் வர வேண்டும். அது வரவில்லை என்றால் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்தப் படத்தின் விழாவில் அவர் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு அவர் நிச்சயம் வர வேண்டும். வரவில்லை என்றால் அவர் வாங்கிய சம்பளத்தில் குறிப்பிட்டத் தொகையை அவர் திரும்ப தரவேண்டி இருக்கும். அதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஒரு முடிவை எடுப்போம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com