சினிமா தொழிலாளர்களுக்கு எஸ்.ஆர்.பிரபு நன்கொடை

சினிமா தொழிலாளர்களுக்கு எஸ்.ஆர்.பிரபு நன்கொடை

சினிமா தொழிலாளர்களுக்கு எஸ்.ஆர்.பிரபு நன்கொடை
Published on

சினிமா தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான 'ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு பெப்சிக்கு 10லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கி உள்ளார். கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சினிமா வேலைநிறுத்தத்தால் வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர்கள் நலனுக்காக இது அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் நலனுக்காக நன்கொடை அளிக்க முன் வந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com