\

தயாரிப்பாளரை வில்லனாக்குகிறார் பாலா?

தயாரிப்பாளரை வில்லனாக்குகிறார் பாலா?
Published on

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா - ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குனர் பாலா.. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் புது சர்ப்ரைஸ் செய்தி என்னவென்றால், படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் ராக்லைன் வெங்கடேஷ்-க்கு நெகட்டிவ் ரோல் என்றும் சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ஒரு சில கன்னடப்படங்களில் நடித்துள்ளார். ஒருவேளை ராக்லைன் வெங்கடேஷ் பாலாவின் படத்தில் நடித்தால், தமிழில் அவர் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com