தன் மீதான புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் விளக்கம்

தன் மீதான புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் விளக்கம்
தன் மீதான புகார் குறித்து தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ் விளக்கம்

’தர்மதுரை’வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு 'புலிப்பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதையொட்டி அவர் மீதான புகார் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

விஜய் சேதுபதி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான ’தர்மதுரை’  திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை, ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். இதன் வெற்றிக்கு பிறகு, ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'புலிப்பாண்டி' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஆர்.கே. சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் தயாரிக்கிறது.  இதன் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சுரேஷ் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் மீது எழுந்துள்ள புகார் குறித்தும், சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். இதுக்குறித்து அவர் “ கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது படம் கவனிக்கப்படவில்லை. படத்தை மறுபடியும் வெளியிட வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.இருப்பினும், சில தியேட்டர்களில் படத்தை வெளியிட உதவினோம். படம் சுமாராக இருந்ததால் வசூலும் பெரிதாக இல்லை. இது சம்பந்தமான கணக்குகளைக் காட்டி ஐந்து லட்ச ரூபாய்  பணமும் கொடுத்தோம். ஆனால் எதுவுமே கொடுக்கவில்லை என்று தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர். “ இது சம்பந்தப்பட்ட கணக்குகள் அப்படியே உள்ளன. அவர்கள்தான் வாங்கிக் கொள்ளவில்லை.  அதற்கு நானா பொறுப்பு? எதுவாக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம்  பேசித் தெளிவுபடுத்தி தீர்த்துக் கொள்வதை  விட்டுவிட்டு ஒரு தயாரிப்பாளர் பற்றி பொதுவில் ஊடகங்களுக்குச் செய்தி வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கத்தின் நடை முறை சட்டதிட்டங்களுக்கு எதிரான செயல். அது மட்டுமல்ல;  இது  என் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும். இது தொடருமானால்  அவர்கள்  மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் " என்று கூறியுள்ளார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com