\
நடிகர் ஆனார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!

நடிகர் ஆனார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!

நடிகர் ஆனார் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே!
Published on

ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் படங்களை தயாரித்து வருபவர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார். ’ஆரோகணம்’ படம் மூலம் தயாரிப்பைத் தொடங்கிய இவர், பல படங்களைத் தயாரித்தும் விநியோகித்தும் வருகிறார். இரண்டு முறை தேசிய விருதுகளைப் பெற்ற தயாரிப்பாளர் இவர். இவர் இப்போது தயாரித்துள்ள, ‘தரமணி’ படத்தில் கமிஷனராக நடித்துள்ளார். 

’இந்தக் கேரக்டருக்கு முதலில் நிறைய நடிகர்களை வரவழைத்துப் பார்த்தார் இயக்குனர் ராம். அவருக்கு திருப்தியில்லை. கடைசியில் என்னையே நடிக்கச் சொல்லிவிட்டார். 'எனக்கு புதுமுகமா இருந்தா இன்னும் பெட்டர். தெரிந்த முகமாக இருந்தால் அவர் மீது கதை செல்வதாக பார்வையாளர்கள் யூகிப்பார்கள். புதுமுகம் என்றால் அதற்கு வாய்ப்பில்லை' என்றார். இருந்தாலும் தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டேன். இந்தப் பாத்திரத்துக்காக நான் எந்த முன்தயாரிப்பும் செய்யவில்லை’ என்றார் சதீஷ்குமார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com