சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்

சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்

சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார்
Published on

சிம்பு - கவுதம் கார்த்தி நடிப்பில் உருவாகும் முஃப்டி திரைப்படத்திற்கு சரியான முறையில் கால்ஷீட் தருவதில்லை என்று சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார்.

கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த முஃப்டி என்ற படத்தை தமிழில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அத்துடன் ஒரு மாதம் அந்தப் படத்தின் சூட்டிங்கில், சிம்பு - கவுதம் கார்த்திக் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. 

ஆனால் முதல்கட்ட சூட்டிங்கை முடித்த சிம்பு ஓய்வுக்காக தாய்லாந்து சென்றார். இதனால் முஃப்டி படத்தின் சூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 

இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு அலுவலரிடம் சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார் கொடுத்துள்ளார். சிம்புவின் செயல்பாடால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்பு மீது நடவடிக்கை எடுப்பதுடன், தன்னுடைய நஷ்டத்திற்கான தொகையை அவரிடம் பெற்று தரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com