"எனது அடுத்தப் படமும் அஜித் உடன்தான்” : போனி கபூர் பேட்டி

"எனது அடுத்தப் படமும் அஜித் உடன்தான்” : போனி கபூர் பேட்டி

"எனது அடுத்தப் படமும் அஜித் உடன்தான்” : போனி கபூர் பேட்டி
Published on

’வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இணையவிருக்கிறார் என்பதை போனி கபூர் உறுதி செய்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். வரும் பொங்கலையொட்டி ‘வலிமை’ வெளியாகிறது. ‘வலிமை’ படத்திற்குப் பிறகு அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படமும், சத்யஜோதி நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஒரு படம் நடிப்பதாக முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் ’தி இந்து’ நாளிதழுக்கு அளித்தப் பேட்டியில் “எனது அடுத்தப்படம் மீண்டும் அஜித் - எச். வினோத்துடன்தான்” என்று உறுதி செய்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com