ஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

ஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
ஏப்ரல் 2-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிலிம் சேம்பர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன், நடிகர் பிரகாஷ்ராஜ், பார்த்திபன், கே.இ.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ராஜேஷ்வரன், உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் வரும் 27-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறினார். அதற்கான பதில் வரும் 28-ம் தேதி கிடைக்கும் என்றார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற 01.03.2017 கடைசி நாளாகும். ஏப்ரல் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் தேர்தல் நடைபெறும் என்றும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலுக்காக, நடிகர் விஷால் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கு, விஷால் போட்டியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com