\
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஓராண்டு நிறைவு; இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஓராண்டு நிறைவு; இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ ஓராண்டு நிறைவு; இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
Published on

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் வெளியாகி ஓராண்டு ஆனதையொட்டி இப்பட தயாரிப்பாளர் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

நடிகர்கள் துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருப்பார் இயக்குனர் தேசிங்.

இப்படத்தை ரஜினிகாந்த் உட்பட பலரும் பாராட்டினர். வித்யாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தை கொடுத்ததால் இக்கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கடந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியானது. அதேபோல, இப்படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனிக்கும் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், படம் வெற்றிகரமாக ஓடியதையொட்டியும் ஓராண்டு நிறைவு செய்தயையொட்டியும் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் தேசிங் பெரியசாமிக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com