அஜித் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா பாடகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
என்னை அறிந்தால், வேதாளம் மற்றும் கருப்பன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா. இவர் தமிழ், தெலுங்கில் படங்களை தயாரித்து வருகிறார். படங்களை தயாரிப்பதை போலவே அவருக்கு பாடுவதிலும் ஈடுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் நில்க்ரிஸ் ட்ரீம் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் கூத்தன் என்ற திரைப்படத்தில் பாலாஜி இசையில் இவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். இதில் நடிகை ரம்யா நம்பீசன் ஒரு குத்து பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய ஃபை..ஃபை..கலாச்சி ஃபை பாடல் ஏற்கெனவே பெரிய ஹிட் ஆனாது. இதில் ஐஸ்வர்யா கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் ஸ்டைல் டூயட் பாடியுள்ளார். முதலில் ஒரு பாடலை பாட வைக்கலாம் என்றுதான் அவரை நாங்கள் அழைத்தோம். அவரது குரலின் இனிமையை கேட்டு மேலும் ஒரு பாடலை பாட வைத்தோம் என்கிறார் படத்தின் இசை அமைப்பாளர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் ஏ.ல்.வெங்கி இயக்கி வருகிறார். புதுமுக நடிகர் ராஜ்குமார் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆக்சிஜன் என்ற தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா இரண்டு பாடல்கள் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.