ஜார்ஜியாவில் 'விஜய் 65' படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல்?

ஜார்ஜியாவில் 'விஜய் 65' படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல்?

ஜார்ஜியாவில் 'விஜய் 65' படப்பிடிப்பு தொடர்வதில் சிக்கல்?
Published on

விஜய் நடித்து வரும் ’விஜய் 65’ படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி ஜார்ஜியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவ்வப்போது மழை பெய்வதால் படத்தின் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாளில் ஓரிரு காட்சிகளை மட்டுமே படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர் என்று படக்குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இதேபோன்ற சூழல் தொடர்ந்து ஏற்பட்டால், விரைவில் 'விஜய் 65' படக்குழுவினர் சென்னை திரும்புவர் என்றும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com