ரஜினிகாந்துக்கு காய்ச்சலா? - பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கம்

ரஜினிகாந்துக்கு காய்ச்சலா? - பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கம்
ரஜினிகாந்துக்கு காய்ச்சலா? - பி.ஆர்.ஓ ரியாஸ் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மையில்லை பி.ஆர்.ஓ ரியாஸ் தெரிவித்துள்ளார்

அரசியல், திரைப்படம் என ரஜினியை சுற்றி பரபரப்பு நிலவிய வண்ணமே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப் போவதாக சமூகவலைதளங்களில் ரஜினி பெயரில் ஓர் அறிக்கை வெளியானது. சூழலை கருத்தில் கொண்டு ரசிகர்களும் மக்களும் என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை ஏற்பேன் என ரஜினிகாந்த் கூறுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

உடனடியாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், சமூக ஊடங்களில் வெளியான அறிக்கை தன்னுடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியிருந்தார். எனினும் அதில் வந்திருக்கும் தன்னுடைய உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மையே என ரஜினிகாந்த் பதிவிட்டார்.

இந்நிலையில் மீண்டும் ரஜினியின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என செய்தி பரவியது. இது குறித்து புதிய தலைமுறைக்கு பேசிய பி.ஆர்.ஓ ரியாஸ், நடிகர் ரஜினிகாந்துக்கு காய்ச்சல் என பரவும் தகவலில் உண்மையில்லை என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com