\
’சூர்யா 40’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்; அதிகாரபூர்வ அறிவிப்பு

’சூர்யா 40’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்; அதிகாரபூர்வ அறிவிப்பு

’சூர்யா 40’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்; அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவிருக்கின்றன. ‘சூர்யா 40’ படத்தின் ஹீரோயின் யார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார் என்று இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

விஜய் படத்தை இயக்கவிருக்கும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய ’டாக்டர்’ படத்தில் பிரியங்கா மோகன்–சிவகார்த்திகேயனின் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா மோகன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com