அமெரிக்காவில் சூரிய குளியல் செய்த ப்ரியங்கா சோப்ரா படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறார். Quantico சீரியலில் நடிக்க தொடங்கிய பின் ஹாலிவுட் நடிகை அந்தஸ்துக்கு அவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டது. குளோபல் கோல்ஸ் விருது விழாவை முடித்து கொண்டு இப்போது அவர் Quantico குழுவுடன் மூன்றாவது சீசன் படப்பிடிப்பில் மூழ்கி இருக்கிறார். அந்தப் படப்பிடிப்பின் இடைவெளியில் அவர் அதிகாலை சூரிய ஒளியில் குளியல் போட்டிருக்கிறார். பிகினி உடையில் அவர் நீச்சலடிக்கும் படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் படங்கள் வெளியான வேகத்தில் தீயாக பரவ ஆரம்பித்திருக்கிறது. முகத்தை சூரிய ஒளிக்கு ஏற்ப மேல் காடியவாறு அவர் நீந்தும் அழகை பலரும் வர்ணித்து வருகின்றனர்.