உலக அழகி பட்டம் வென்றபோது பிரியங்கா சோப்ராவிடம் அம்மா கேட்ட முதல் கேள்வி.!

உலக அழகி பட்டம் வென்றபோது பிரியங்கா சோப்ராவிடம் அம்மா கேட்ட முதல் கேள்வி.!

உலக அழகி பட்டம் வென்றபோது பிரியங்கா சோப்ராவிடம் அம்மா கேட்ட முதல் கேள்வி.!
Published on

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் தனது ரசிகர்களுக்கு தன் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை சமூக ஊடங்கள் மூலம் அப்டேட் செய்துவருகிறார்.

சமீபத்தில் பிரியங்கா, 2000ஆம் ஆண்டில் தான் உலக அழகி பட்டம் வென்ற நாளை தனது தாயாருடன் சேர்ந்து நினைவுகூர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்காவின் தாயார் மது சோப்ரா, பட்டம் வென்ற தனது மகளிடம் முதலில் முட்டாள்தனமான கேள்வியை கேட்டதாகக் கூறியுள்ளார்.

அதில், ‘’என் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை. அவளைக் கட்டித் தழுவ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளை கட்டியணைத்தபோது, முதலில் உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது, உலக அழகி பட்டம் வென்றதைக் குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்று வாழ்த்துவதற்கு பதிலாக முட்டாள்தனமான ஒரு கேள்வியைக் கேட்டேன்’’ என்கிறார்.

உலக அழகி பட்டம் வென்றபோது நடந்த சில நகைச்சுவை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்ட பிரியங்கா, அந்த வீடியோவில், ‘’18 வயது ஆன நான் உலக அழகிபட்டம் வென்றேன். எனது பெற்றோரிடம் வந்தபோது, எனது அம்மா முதலில் என்னிடம் கேட்டது, ‘பேப், உனது படிப்பு என்ன ஆகப்போகிறது?’ என்பதுதான்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com