"நான் எதை செய்தாலும் தப்பு கண்டுபிடிக்கிறாங்க" - நடிகை பிரியங்கா சோப்ரா குமுறல்!

ஆர்.ஆர்.ஆர். ஒரு தமிழ்ப் படம் எனக் குறிப்பிட்டது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
Priyanka Chopra
Priyanka ChopraTwitter

அண்மையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் கூறுகையில், 'ஆர்.ஆர்.ஆர். ஒரு தமிழ்ப் படம். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் தமிழ் படம். இது எங்களின் அவெஞ்சர்ஸ் படம் போன்றது' என்றார்.

பிரியங்கா சோப்ரா இப்படி குறிப்பிட்டதை கேள்விப்பட்டு சோஷியல் மீடியாவில் தெலுங்கு ரசிகர்கள் அவரை வறுத்தெடுக்க தொடங்கினர். உலக அளவில் ஆஸ்கர் விருது பெற்று கவனம் ஈர்த்த ஆர்.ஆர்.ஆர் படத்தை தமிழ் படம் என அவர் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. இதுதொடர்பாக தெலுங்கு ரசிகர்கள், 'ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ் படம் அல்ல; தெலுங்கு படம்' என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர். ஒரு தமிழ்ப் படம் எனக் குறிப்பிட்டது தொடர்பாக விளக்கமளித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ''நான் செய்யும் எல்லாவற்றிலும் மக்கள் தவறைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் அதைக் கொஞ்சம் ரசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் மிகவும் சுதந்திரமாக இருந்தேன், ஆனால் இப்போது, நான் சற்று எச்சரிக்கையாக இருக்க விரும்புகிறேன். ஏனென்றால் என் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். குடும்பம்தான் உயர்ந்தது.

நிறைய பேர் நீங்கள் எப்போது வீழ்வீர்கள் என காத்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், எனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் ஆதரவும் உள்ளது. நான் அதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com