சினிமா
படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்
படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்
படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக நடிகை பிரியங்கா சோப்ரா காயமடைந்தார்.
இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு அமெரிக்க டிவி தொடரிலும் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ’குவான்டிகோ’ என்ற தொடர் அங்கு பிரபலமானது. இதில் அவர் அலெக்ஸ் பாரிஷ் என்ற FBI ஏஜெண்டாக நடிக்கிறார்.
இந்த தொடரின் மூன்றாவது சீசனின் ஷூட்டிங் இப்போது நடந்து வருகிறது. இதில் நடித்து வரும் பிரியங்கா சோப்ராவுக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டது. இதில் அவர் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் மூன்று வாரம் ஓய்வெடுக்கக் கூறியுள்ளனர். இதை பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.