''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ

''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ

''பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது...'' - பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ
Published on

நடிகை பிரியங்கா சோப்ரா சுதந்திர தின வாழ்த்தாக பெண்களின் முன்னேற்றம் குறித்த வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பலரும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தியாவின் பெருமைகளை இன்று நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சுதந்திர தின வாழ்த்தாக பெண்களின் முன்னேற்றம் குறித்த வீடியோ ஒன்றை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
 
 
View this post on Instagram

History is made when women take strides towards change. ??#Happy74thIndependenceDay ?? #womeninhistory #changemakers

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

அந்த வீடியோவில் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். சரோஜினி நாயுடு, அம்ரித்கால், கமலாகால், கஸ்தூரிபா காந்தி உள்ளிட்ட சிலரின் பெயர்களும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது வரலாறு உருவாக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் வீடியோவில், சுதந்திரப் போராட்டம் எண்ணற்ற வலுவான மற்றும் அச்சமற்ற பெண் தலைவர்களைப் பெற்றெடுத்தது. வந்தே மாதரம் என அவர் பேசுகிறார். பிரியங்கா சோப்ராவின் இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com