கணவர் பெயர் நீக்கம்: விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா

கணவர் பெயர் நீக்கம்: விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா

கணவர் பெயர் நீக்கம்: விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியங்கா சோப்ரா
Published on
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் கணவர் பெயரான ஜோனஸ் என்பதை நீக்கிவிட்டு பிரியங்கா சோப்ரா என்று மட்டும் வைத்துக் கொண்டதால், இருவரும் பிரியப் போகிறார்களோ என்று சந்தேகம் எழுந்தது.
பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான புதிதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் விவாகரத்து வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அதேபோல் விவகாரத்து குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு காரணம் திருமணத்திற்குப் பின்னர் பிரியங்கா சோப்ரா அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தனது பெயரை 'பிரியங்கா சோப்ரா ஜோனஸ்' என மாற்றிக் கொண்டார். ஆனால், நேற்று திடீரென தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கணவர் பெயரான ஜோனஸ் என்பதை நீக்கிவிட்டு பிரியங்கா சோப்ரா என்று மட்டும் வைத்துக் கொண்டார். இதனால், இருவரும் பிரியப் போகிறார்களோ என்று சமூக வலைத்தளங்களில் விவாதம் நடந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிக் ஜோனஸ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com