\
மிண்டி காலிங்குடன் ஹாலிவுட் படத்தில் இணைகிறார் பிரியங்கா!

மிண்டி காலிங்குடன் ஹாலிவுட் படத்தில் இணைகிறார் பிரியங்கா!

மிண்டி காலிங்குடன் ஹாலிவுட் படத்தில் இணைகிறார் பிரியங்கா!
Published on

பிரபல நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.

நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் தமிழன் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு இந்தியில் நடிக்க தொடங்கிய அவர் முன் னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாட கரும் நடிகருமான நின் ஜோனாஸை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவர் புதிய பட அறிவிப்பு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரிந்துள்ளார். அதில் பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங் குடன் நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ’’நல்ல கதைகளை சொல்ல வேண்டும் என்பதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இதில் இணைந்திருப்பது பெருமை’’ என்று தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, ‘;விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்’’ என்றும் கூறியுள்ளார். 

இது, இந்திய திருமணம் பற்றிய காமெடி படம். இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஷூட்டிங் நடக்கிறது. மிண்டி காலிங் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. மிண்டி, தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com