மும்பையில் பிரியங்கா- நிக் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி!

மும்பையில் பிரியங்கா- நிக் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி!

மும்பையில் பிரியங்கா- நிக் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி!
Published on

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் திருமணம் நிச்சயதார்த்த பார்ட்டி மும்பையில் இன்று நடக்கிறது. 

தமிழில் விஜய்யின் ’தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் இந்தியில் நடித்த அவர், அங்கு முன்னணி நடிகையானார். இப்போது ஹாலிவுட் படங்களிலும் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை விட பத்து வயது குறைந்த பாப் பாடகரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸை அவர் காதலித்து வருகிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஜூலை மாதம் முடிந்துவிட்டது. நிச்சயதார்த்ததுக்கு லண்டனில் உள்ள பிரபலமான நகைக்கடையில் நிக், 5 கேரட்டில் மோதிரம் வாங்கியதாகவும் அதன் மதிப்பு 2 லட்சம் அமெரிக்க டாலர் எனவும் கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் முடிவடைந்ததை அடுத்து இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். 

(மும்பை விமான நிலையத்தில் நிக் ஜோனாஸ்)

இதற்காக, சல்மான்கானுடன் பிரியங்கா நடிக்க இருந்த ’பாரத்’ என்ற படத்தில் இருந்து விலகியதாகக் கூறினார். அந்தப் படத்தின் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர், ’பிரியங்கா சோப்ரா இந்தப் படத்தில் இல்லை. ’காரணம் மிகவும் ஸ்பெஷலானது’ என்று பிரியங்கா தெரிவித்துள்ளார். அவரது முடிவில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். அவருக்கு எங்கள் படக்குழு வாழ்த்துகளை தெரிவிக்கிறது’ என்று கூறியிருந்தார். இதனால் திருமணத்துக்காகத்தான் அவர் இந்தப் படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்பட்டது.

(பிரியங்கா சோப்ராவின் பங்களா)

இந்நிலையில், இவர்களது நிச்சயதார்த்த விருந்து மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் இன்று நடக்கிறது. இந்திய முறைப்படி நடக்கும் இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவே நிக் ஜோனஸ் தனது குடும்பத்துடன் மும்பை வந்தார். அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார் பிரியங்கா. 

நிச்சயதார்த்த விருந்து இன்று தொடங்கிவிட்டது. இதற்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார் பிரியங்கா. நிக் ஜோனாஸின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான மாரியாட்டில் 200 சொகுசு அறைகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com