\
சூர்யாவுக்கு ஜோடியாகும்  ’டாக்டர்’ பட ஹீரோயின்?

சூர்யாவுக்கு ஜோடியாகும் ’டாக்டர்’ பட ஹீரோயின்?

சூர்யாவுக்கு ஜோடியாகும் ’டாக்டர்’ பட ஹீரோயின்?
Published on

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா இணைந்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவிருக்கின்றன. ‘சூர்யா 40’ படத்தின் ஹீரோயின் யார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிவந்த நிலையில், டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரியங்கா அருள்மோகன் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் படத்தை இயக்கவிருக்கும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் பிரியங்கா அருள்மோகன் – சிவக்கார்த்திகேயனின் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடம், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழில் கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா அருள்மோகன்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com