\
என்னைப் பார்த்து ஏன் இதை கேட்டீங்க? : வெடித்தது விருது சர்ச்சை

என்னைப் பார்த்து ஏன் இதை கேட்டீங்க? : வெடித்தது விருது சர்ச்சை

என்னைப் பார்த்து ஏன் இதை கேட்டீங்க? : வெடித்தது விருது சர்ச்சை
Published on

64 தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக அக்‌ஷய்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுகள், தேர்வுக் குழுவுக்கு பிரியதர்ஷன் தலைமை தாங்கியிருந்தார். பிரியதர்ஷனும் அக்‌ஷய்குமாரும் நண்பர்கள். பிரியதர்ஷன் இயக்கிய பல படங்களில் அக்‌ஷய்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் இந்த விருது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதே போல பிரியதர்ஷனும் மோகன்லாலும் பல வருட நண்பர்கள் என்பது தெரிந்த ஒன்று. அவருக்கு சிறப்பு விருது கொடுத்திருப்பதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுபற்றி பிரியதர்ஷனிடம் கேட்டபோது, ‘அக்‌ஷய்குமார் தேசிய விருதுக்கு தகுதியான நடிகர். ரஷ்டம் படத்தில் அவர் சிறப்பாகவே நடித்திருந்தார். அவரை நான் மட்டுமே தேர்வு செய்யவில்லை. என்னுடன் 38 ஜூரி உறுப்பினர்கள் இருந்தனர். எல்லோரும் சேர்ந்துதான் தேர்வு செய்தோம். கடந்த முறை பிரபல இயக்குனர் ரமேஷ் சிப்பி தேர்வுக்குழு தலைவராக இருந்தார். அவர் பிக்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு விருது அறிவித்தார். அவரிடம் கேள்வி கேட்டீர்களா? பிறகு என்னிடம் மட்டும் இந்த கேள்வியை எப்படிக் கேட்கலாம்?’ என பிரியதர்ஷன் சொன்னார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com