\
ஹீரோயின் ஆகிறார் பிரியதர்ஷன் - லிசி மகள்

ஹீரோயின் ஆகிறார் பிரியதர்ஷன் - லிசி மகள்

ஹீரோயின் ஆகிறார் பிரியதர்ஷன் - லிசி மகள்
Published on

இயக்குனர் பிரியதர்ஷன் - லிசி தம்பதியின் மகள் கல்யாணி ஹீரோயின் ஆகிறார்.

இயக்குனர் பிரியதர்ஷனும் நடிகை லிசியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்ற மகளும் சித்தார்த்
என்ற மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக பிரியதர்ஷனும் லிசியும் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் கல்யாணி
ஹீரோயினாக அறிமுகமாகிறார். நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் ஹீரோவாக நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில்தான் கல்யாணி ஹீரோயினாகிறார்.

அமெரிக்காவில் படித்துள்ள கல்யாணி, விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடித்த ’இருமுகன்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
அப்பாவை போல இயக்குனராகும் ஆசையில் இருந்தவர், அம்மாவை போல ஹீரோயினாகி இருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com